
மதுரையில் கீழே கிடந்த மூன்று லட்ச ரூபாய் எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நாணயம் மிக்க நபருக்கு மதுரை போலீஸ் கமிஷனர் பாராட்டு
21.05.2025 அன்று திடீர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் பேருந்து நிலைய பாலத்தின் அருகில், சாலையில் கிடந்த ரூபாய் 3 இலட்சம் ரொக்க பணத்தினை திரு.சுருளிவேல் என்பவர் எடுத்து, மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் உரிய நபரிடம் ஒப்படைத்துள்ளார். இவரது இந்த நேர்மையான செயலினை பாராட்டும் விதமாக மாநகர காவல் ஆணையர் அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
