
திண்டிவனப் பகுதியில் திருடுபோன வாகனங்களையும் அவைகளை திருடிய நபர்களையும் விரைந்து கண்டுபிடித்த காவலர்களுக்கு பாராட்டு
திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சஞ்சீவீராயன் பேட்டை பகுதியில் கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து 10 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை விரைவாக கைது செய்த திண்டிவனம் உட்கோட்ட தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஐய்யப்பன், தலைமை காவலர் திரு.ஜனார்த்தனன், திரு.கோபாலன், முதல் நிலை காவலர் திரு.செந்தில் முருகன் திரு.கோபாலகிருஷ்ணன் மற்றும் திரு.சிரஞ்சீவி ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
