
விழுப்புரம் நகர பகுதியில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் நான்கு பேர் கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
விழுப்புரம் நகர பகுதியில் கடந்த 12.06.2025 ஆம் தேதி அன்று நடந்த ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் தகடு வைத்து பணம் திருடி சென்ற வட மாநில இளைஞர்கள் நான்கு பேரை கைது செய்த விழுப்புரம் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.லியோ சார்லஸ், தலைமை காவலர்கள் திரு .மகாராஜா, திரு
பாலமுருகன், திரு.குமரகுருபரன், திரு.நீலமேகம், திரு.சத்தியம் மற்றும் காவலர் திரு.அருள் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் IPS., அவர்கள் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
