Police Department News

மதுரையில் அதி நவீன வாகன பதிவு கண்காணிப்பு கேமராக்களுடன் சோதனைச் சாவடி திறப்பு

மதுரையில் அதி நவீன வாகன பதிவு கண்காணிப்பு கேமராக்களுடன் சோதனைச் சாவடி திறப்பு

மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று (24.07.2025) எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்குட்பட்ட விராட்டிபத்து பகுதியில், அகச்சிவப்பு கதிர்கள் மூலம், வாகன எண்களை துல்லியமாக படம் பிடித்து வாகன விபரங்களை எளிய முறையில் அடையாளம் காணும் வகையிலான , அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமரா (Automatic Number Plate Recognition) வசதிகளுடன் , 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் செயல்படக்கூடிய புதுப்பிக்கப்பட்ட காவல் சோதனைச்சாவடியை மாநகர காவல் ஆணையர் அவர்கள் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார் . காவல் துணை ஆணையர் (தெற்கு ) அவர்கள் உடனிருந்தார். இந்நிகழ்வில் காவல்துறையினர் மற்றும் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.