
மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பெட்ரோல் விற்பனை உரிமையாளர்களுடன் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம்
கடந்த 05/08/2025 ம் தேதி மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் தலைமையில் மதுரை மாநகரில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உடன் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் அறுபதுக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் ஒவ்வொரு பெட்ரோல் பங்க் விற்பனை நிலையங்களிலும் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் அந்த வளாகம் மற்றும் சாலைகளை கண்காணிக்கும் வகையில் பொருத்த வேண்டும்
எனவும் இரவு நேரங்களில் போதுமான பணியாளர்களை பணி நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும், எக்காரணம் கொண்டும் யாருக்கும் பாட்டில்களிலோ, தண்ணீர் பாட்டில்களிலோ சில்லறையாக பெட்ரோல் விற்பனை கண்டிப்பாக செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் திடீரென ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க அபாய ஒலி எழுப்பும் அலாரங்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும், ஒவ்வொரு பெட்ரோல் விற்பனை நிலையத்திலும் அருகில் உள்ள காவல்நிலைய தொலைபேசி எண்கள் காவல் ஆய்வாளர் தொலைபேசி எண் மற்றும் அந்த பகுதியில் உள்ள ரோந்து வாகனத்தின் தொலைபேசி எண்கள் அடங்கிய தகவல் பலகை அமைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டது. தினமும் இரவு நேரங்களில் உள்ள ரோந்து வாகனங்கள் தங்களது பகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு பெட்ரோல் விற்பனை நிலையத்தையும் கண்காணிப்பார்கள் எனவும், காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் மேற்பார்வை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஏதேனும் பிரச்சினைகள் அல்லது குற்ற நிகழ்வுகள் நடந்தால் மதுரை மாநகர காவல் துறையின் 83000-21100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அப்பிரச்சனை குறித்து வீடியோவாகவோ அல்லது படமாகவோ தொடர்பு எண்ணுடன் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், என்ன தகவல் அளிக்கப்படுகிறது என்பது தான் முக்கியமே தவிர யார் அளித்தார்கள் என்பது முக்கியம் அல்ல எனவும், இதனால் குற்ற நிகழ்வுகள் நடப்பதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக அமையும் எனவும் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
