
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை ரயில் நிலைய சுகாதார துறையின் தலைமையில் கல்லூரி என்சிசி மாணவர்களின் தூய்மை பணி
02-10-2025 அன்று மதுரை தெற்கு ரயில் நிலைய சுதாகாரத் துரையின் தலைமையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற தூய்மை பணியில் மதுரை கல்லூரி, தியாகராஜர் கல்லூரி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, லதா மாதவன் பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 80 NCC மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு ரயில் தண்டவாளங்களை தூய்மைப்படுத்தினர். தூய்மை பற்றிய அவசியம் மற்றும் விழிப்புணர்வை ஊர்வலம் மூலமாக பொதுமக்களுக்கு மாணவர்கள் அறிவுறுத்தினர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டை NCC அதிகாரிகள் லெப்டினென்ட் கார்த்திகேயன் மற்றும் லெப்டினென்ட் ஞானப்பிரகாசம் ஏற்பாடு செய்தனர். 7 வது NCC பட்டாலியன் ராணுவ அதிகாரிகள் சுபேதார் பால் மற்றும் ஹவில்தார் பசுபதி உடனிருந்தனர்.
