
கொடை ரோடு ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் கல்லெறிந்த சிறுமி
கடந்த 23.9.2025 ம் தேதி மாலை சுமார் 05.40 மணி அளவில் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் வண்டி எண் 20628 அதி வேக விரைவு இரயில் மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் போது கொடை ரோடு இரயில் நிலையம் அருகே ஒரு சிறுமி கற்களை கொண்டு அந்த இரயிலின் கண்ணாடி மீது எறிந்தார். இது அந்த இரயிலின் முன்பக்க இஞ்சின் மற்றும் பின்புறம் உள்ள காடு பெட்டியின் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி யின் மூலமாக தெரிய வந்தது. உடனே இது தொடர்பாக மதுரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் கொடை ரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகில் கே.புதுரை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகள் இந்த செயலை செய்தது தெரியவந்தது.
இதனை சிசிடிவி யில் ஆராய்ந்ததின் மூலம் கண்டுபிடித்தனர்.
அந்த குழந்தையின் வயது 12 ஆகும். பொதுவாக எந்த இரயில் ஆனாலும் அதிவேகமாக செல்லும் பொழுது யாரேனும் கற்களை கொண்டு எறிந்தால் அது பயணிகளின் உயிருக்கு பேராபத்தை விளைவிக்கும் மற்றும் ரயில்வேக்கு பெரும் பொருட்சேதத்தையும் விளைவிக்கும்
மேலும் பயணிகளுக்கு கொடுங்காயம் மற்றும் உயிருக்கே பேராபத்தை விளைவிக்கும்.
இது சம்பந்தமாக தென்னக இரயில்வே மண்டல இரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் உயர்திரு. அருள் ஜோதி அவர்களின் அறிவுறுத்தலின்படி மற்றும் மதுரை கோட்ட இரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் உயர் திரு. செஞ்சையா அவர்களின் வழிகாட்டுதலின்படி திரு. அஜித்குமார், மதுரை இரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அவர்களின் தலைமையில் அந்த ஏரியாவில் கல் எறிந்த சிறுமியின் தந்தையிடம் ஒரு உறுதிமொழி பத்திரம் மூலமாக இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் அவருடைய மகள் ஈடுபட மாட்டார் என உறுதிமொழி பெறப்பட்டது. இதனை அந்த ஏரியா கவுன்சிலர் திரு.கருணாகரன் மற்றும் பொதுமக்களுக்கும் தெரியபடுத்தபட்டது. மேலும் இது சம்பந்தமாக மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி அந்த ஏரியாவில் மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்டது. இதனுடைய விபரீத தன்மையும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.
