
பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த 4 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது
01.11.2025 அன்று, கூடுவாஞ்சேரி காவல்துறையினர், தயிலாவரம் சந்திப்பு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது. சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த KL 01 CC 6955 பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், 2 கிலோ கஞ்சா மற்றும் 3 இரும்புக் கத்திகள் இருந்ததைக் கண்டறிந்து கஞ்சா, கத்திகள், Maruti Baleno நான்கு சக்கர வாகனம் மற்றும் 2 கைபேசிகளையும் பறிமுதல் செய்து, காரில் இருந்த 3 குற்றவாளிகள், 1) அசோக் @ ஸ்டிக்கர் அசோக், வ/ 25, 2) முனீஸ்வரன் @ சாமான், வ/22, மற்றும் 3) சந்தோஷ், வ/25, ஆகிய 3 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, 18 கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் Cr.no. 268/2025 u/s 8(c), 20(b)(ii) (C)29(1) NDPS Act., & 25 (14) Arms Act.,-ன்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களில் இருவர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும், அவர்கள் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 1) அசோக் @ ஸ்டிக்கர் அசோக், வ/ 25, என்பவருக்கு எதிராக 8 வழக்குகளும், 2) முனீஸ்வரன் @ சாமான், வ/22, என்பவருக்கு எதிராக 4 வழக்குகளும், மற்றும் 3) சந்தோஷ், வ/25, என்பவருக்கு எதிராக 5 வழக்குகளிலும் உள்ளன.
கைது செய்யப்பட்ட மூவரில், அசோக் @ ஸ்டிக்கர் அசோக், என்பவர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தின் H.S. No. 03/25 ‘B’ Cat.,-, முனீஸ்வரன் @ சாமான், என்பவர் ஓட்டேரி காவல் நிலையத்தின் H.S. No. 09/24 ‘A’ Cat.,- ன் படியும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஆவார்கள்.
மேலும், 31.10.2025 அன்று மாலை 07:45 மணியளவில், மாடம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள தேவர் இரும்புக் கடைக்கு, கத்தியுடன் வந்த எதிரி, “பூச்சி” என்கிற இரத்தினசபாபதி, வ/30, பாதிக்கப்பட்ட சுப்ரமணியம், வ/57, என்பவரை மிரட்டி தாக்கி, அவரிடமிருந்து ரூ. 1,500/- ஐ கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக, T-10 மணிமங்கலம் காவல் நிலையத்தில் Cr.No. 417/2025 u/s 126 (2), 296 (b), 309 (4), 311, 109 (1), 351 (3) BNS., -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், குற்றவாளியான “பூச்சி” என்கிற இரத்தினசபாபதி, வ/30, த/பெ சுகுமார், மாரியம்மன் கோயில் தெரு, காட்டாங்கொளத்தூர், என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மறைமலைநகர் காவல் நிலைய, HS. No. 18/2020, ‘B’ பிரிவின், சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது ஏற்கனவே 16 குற்ற வழக்குகள் உள்ளன.
இருவேறு காவல் நிலையங்களில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளும், சம்மந்தப்பட்ட குற்றவியல் நடுவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.





