மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திறிந்த ரவுடிகள் கைது
மதுரை மாநகரில் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காவல் துறையினரும் பல அதிரடி நடவடிக்கை எடுத்து அவர்களை கைதும் செய்து வருகின்றனர். இருந்தாலும் ரவுடிகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த்சின்ஹா அவர்கள் காவல் துறையினருக்கு, சதித் திட்டம் தீட்டி ஆயுதங்களுடன் வலம் வரும் ரவுடிகளை கூண்டோடு கைது செய்ய உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையர் சிவப்பிரசாத் மற்றும் குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் பழனிக்குமார், உளவுத்துறை உதவி ஆணையர் சிவக்குமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். முதல் கட்டமாக மதுரை மாநகரில் ஆயுதங்களோடு வலம் வரும் குற்றவாளிகளை குற்றவாளிகளின் தங்கும் இடம் கொலை, கொள்ளை, சதித்திட்டம் ஆகியவை தொடர்பாக புலனாய்வு செய்திஅறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது, இதன் அடிப்படையில் மதுரை மாநகரில் ரவுடிகளின் பட்டியல், அவர்கள் பதுங்கியிருக்கும் இடம்
ஆகியவை வரையறை செய்யப்பட்டு தொடர்ந்து துணை ஆணையர் பழனிக்குமார் அவர்களின் உத்தரவின்படி மாநகர காவலர்கள் உளவுத்துறை குறிப்பிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது வைகை வடகரையில் பதுங்கி இருந்த ரவுடிகள் 9 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆழ்வார்புரத்தை சேர்ந்த பாண்டி மகன் மணிபாண்டி வயது 23, முத்துராமன் மகன் சதீஷ், வயது 23, காமாக்ஷி மகன் அலெக்ஸ் பாண்டியன மீனாக்ஷிசுந்தரம், கல்லானை மகன் செல்வம், வயது 20,/2020,பிரபாகரன் மகன் நாகேஸ்வரன் வயது 19, மற்றும் மூன்று சிறுவர்கள் என்பது தெரியவந்தது. மதுரை அண்ணாநகர் மஸ்தான்பட்டி அரசமரம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் கூடியிருந்தது, ரகசியக்கூட்டம் நடத்துவதாக தகவல் வந்தது, இதனை தொடர்ந்து காவலர்கள் விரைந்து சென்று அங்கிருந்த ஐந்து பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்,விசாரணையில் அவர்கள் வண்டியூர் சங்குநகர் சதீஷ்குமார் வயது 25, காமராஜர்புரம் வடக்குத்தெரு, துரைமுருகன் வயது 25, கக்கன் தெரு முத்துராமலிங்கம் வயது 24, முத்துமணி, வயது காமராஜர்புரம் இந்திரா நகரை செர்ந்த நல்லுச்சாமி, வயது 25, ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் மதுரை மாநகரில் கொலை, கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திறிந்த 14 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கத்தி,அரிவாள், வீச்சருவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆயுதங்களுடன் ரவுடிகளை கைது செய்தது, மதுரை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.