பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திருஅ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 17.01.2020 அன்று சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா பொருட்காட்சியகத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா பொருட்காட்சியகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திருஅ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 17.01.2020 அன்று காவலர்களின் பணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கும், அங்கு பணியிலிருந்த காவலர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் முனைவர் ஆர்.தினகரன், இ.கா.ப, (வடக்கு), அவர்கள், பூக்கடை மாவட்ட காவல் துணை ஆணையாளர் திரு.ராஜேந்திரன், இ,கா,ப., அவர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.








