Police Department News

சிசிடிவி கேமராக்களில் ஸ்பிரே, கோவிலில் மிளகாய்ப் பொடி தூவி கொள்ளை.

சிசிடிவி கேமராக்களில் ஸ்பிரே, கோவிலில் மிளகாய்ப் பொடி தூவி கொள்ளை.

தஞ்சாவூர் நகர்ப் பகுதியான கரந்தை ஜைன முதலி தெருவில், 600 ஆண்டுகள் பழைமையான ஆதீஸ்வரர் என்கிற சமண கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் இன்று அதிகாலை பின்புறம் உள்ள கதவை உடைத்து மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அவர்கள், கோயிலில் இருந்த 3 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆதீஸ்வரர் சிலை, வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒன்றரை அடி உயரம் கொண்ட ஜினவாணி என அழைக்கப்படுகிற சரஸ்வதி, ஜோலமணி, அரை அடி உயரம் உடைய நதீஸ்வரர், ஒரு அடி உயரத்தில் இருந்த பஞ்சநதீஸ்வரர், முக்கால் அடி உயர நவக்கிரக தீர்த்தங்கரர், நவ தேவதா, தாமிரத்தில் செய்யப்பட்ட ஒரு அடி உயர 24வது தீர்த்தங்கரர் உட்பட பல சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

திருட்டுப்போன சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

கோயிலில் மொத்தம் 3 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இவற்றில் இரு கேமராக்களில் காட்சிகள் பதியக்கூடாது என்பதற்காக மர்ம நபர்கள் ஸ்பிரேயர் கொண்டு அடித்து லென்ஸை மூடிவிட்டனர். இதனால், மற்றொரு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்து வருகிறோம்” என்றனர்.

கொள்ளைச் சம்பவம் நடந்த பகுதியினரிடம் பேசினோம். “கோயிலைச் சுற்றி நிறைய வீடுகள் உள்ளன. ஆனால், கொள்ளையர்கள் எந்தப் பயமும் இல்லாமல் சுவர் ஏறிக் குதித்து பின்பக்கக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அத்துடன் இரண்டு நாள்களாக கோயில் குருக்கள் கோயிலுக்கு வராததை நோட்டமிட்டும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் மேலும், மாட்டிவிடக் கூடாது என்பதற்காக மிளகாய்ப் பொடியையும் தூவியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.