Police Department News

தருமபுரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பொன்விழா ஆண்டு கண்காட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சி திறப்பு விழாவிற்கு காவல் கண்காணிப்பாளர் திரு.பண்டிகங்காதர் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் விவேகானந்தன் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியில் காவல்துறையினர் பயன்படுத்தும் துப்பாக்கிகள், தீயணைப்பு கருவிகள், வெடிபொருட்களை கண்டறியும் உபகரணங்கள், காவல்துறையில் பயன்படுத்தப்படும் புலன் விசாரணை பொருட்கள் மற்றும் கணினிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. சாலை போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த குறும்படம் வெளியிடப்பட்டது. போக்குவரத்து நெரிசலை தவிர்த்தல் தொடர்பாகவும், விபத்துகளை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியை மாணவ- மாணவிகள், பொதுமக்கள் திரளாக பார்வையிட்டனர்.

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி நடத்தப்படும் இந்த கண்காட்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 377 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2016-ம் ஆண்டு 324 ஆக குறைந்தது. நடப்பாண்டில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 263 ஆக குறைந்து உள்ளது. சாலை விபத்துகளை தடுப்பது தொடர்பாக பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதன்ஒரு பகுதியாக தற்போது நாம் ஒவ்வொருவரும் மற்றொருவருக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதிமொழி ஏற்று செயல்பட வேண்டும். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு காரணமாகத்தான் விபத்து உயிரிழப்புகள் குறைந்து உள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

விழாவில் காவல் கண்காணிப்பாளர் திரு.பண்டிகங்காதர் பேசுகையில், சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க ஹெல்மெட் அணிவது அவசியம். விபத்து குறைப்பு நடவடிக்கையில் தர்மபுரி மாவட்டம் தமிழக அளவில் தற்போது 2-வது இடத்தில் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் சாலைவிதிமுறைகளை மீறிய 5 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமங்கள் முடக்கப்பட்டு உள்ளன, என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.