1½ கிலோ கஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்கள் கைது.
தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் தலைமையிலான போலீசார் 06.02.2020 அன்று கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த 6 பேரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனா்.
அதில், அவா்கள் கோவில்பட்டி ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த முருகன்(42), கிழக்கு காலனியைச் சேர்ந்த கண்ணன்(45), நாலாட்டின்புத்தூா் மொட்டமலையைச் சேர்ந்த வேல்சாமி(64), சீனிவாசன் நகரைச் சேர்ந்த முத்துகுமாா்(44), புதுக்கிராமத்தைச் சேர்ந்த சங்கரன்(55) மற்றும் தங்கப்ப நாடாா் காலனியைச் சேர்ந்த விஜயகுமார்(23) ஆகியோா் என்பதும், கஞ்சா விற்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் u/s. 8(c) r/w. 20(b)(ii) (B) NDPS Actன் கீழ் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்த 1½ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்யப்பட்டது.