குதிரை ஏற்ற விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு காவல் துறை சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று 2.3.2020. தலைமைச் செயலகத்தில் சென்னை பெருநகர காவல் குதிரைப்படை வீரர்கள் சந்தித்து அரியானா மாநிலத்தில் நடைபெற்ற 38 ஆவது அகில இந்திய அளவிலான
குதிரை ஏற்ற விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு காவல் துறை சார்பாக கலந்து கொண்டு வென்ற ஒரு சுழல் கோப்பை ஒரு தங்கம் ஒரு வெள்ளி மற்றும் வெங்கட பரிசுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்,
உடன் தலைமைச் செயலாளர் திரு .க. சண்முகம் இ.ஆ.ப. உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எஸ் கே பிரபாகர். இ.ஆ.ப. காவல்துறை தலைமை இயக்குனர் திரு J.K திரிபாதி, இ.கா.ப.., சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விசுவநாதன் இ.கா.ப. ஆகியோர் உள்ளனர்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.