Police Department News

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் 7 பேருக்கு கத்தி குத்து, 15 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் அட்டகாசம் தொடர்ந்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை.

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் 7 பேருக்கு கத்தி குத்து, 15 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் அட்டகாசம் தொடர்ந்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை.

சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறகுவதை காண பல் வேறு இடங்களிலிருந்தும் வந்தவர்கள் கோரிப்பாளையம் தல்லாகுளம் தமுக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கூடியிருந்தனர் இந்த கூட்டத்தை பயன்படுத்தி 15 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் அங்கு புகுந்தது அந்த கும்பல் பக்தர்கள் பொதுமக்களிடம் இருந்து செல்போன் உள்ளிட்டவைகளை வழிப்பறி செய்தபடி அடுத்தடுத பகுதிகளுக்கு சென்றது. மேலும் அந்த கும்பல் அரசு ஆஸ்பத்திரி பிணவறை அருகே உள்ள கடையில் நின்று கொண்டிருந்தவரிடம் காத்தியை காட்டி மிரட்டியது பின்னர் அவர் அணிந்திருந்த தங்க நகையை பறித்து கொண்டு தப்பியோடியது. மேலும் அந்த கும்பல் அந்த பகுதியில் கடை வைத்திருந்த குரு என்பவரை அரிவாளால் வெட்டி அவரது செல் போனை பறித்து சென்றது. அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களில் சிலரை விரட்டி சென்று பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் இதனிடையே திருவிழா கூட்டத்தில் வழிப்பறி கும்பல் கத்தியால் குத்தி வழிப்பறி செய்த சம்பவத்தில் வில்லாபுரம் கார்த்தி வயது 30 மீனாட்சிபுரம் தினேஷ் குமார் வயது 23 பேரையூர் யோகிதாஸ் வயது 23. ராமநாதபுர மாவட்ட கடலாடியை சேர்ந்த திருப்பதி வயது 32 வண்டியூர் சந்தோஷ் வயது 22 மகாராஜன் வயது 23 சண்முகப்பாண்டி ஆகிய 7 பேர் காயமடைந்தனர் அவர்களை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இவர்களிடம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.