Police Department News

மைம்‌ நாடகக் கலையின் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜெயங்கொண்டம் மார்டன் கல்லூரி மாணவர்கள்

மைம்‌ நாடகக் கலையின் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜெயங்கொண்டம் மார்டன் கல்லூரி மாணவர்கள்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலையம் அருகே மார்டன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து மைம் (MIME) நாடகத்தின் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்களை தத்ரூபமாக விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மோகனதாஸ் அவர்கள் கலந்துகொண்டார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தத்ரூபமாக நடித்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்களை பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.