Police Department News

சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் கொரானா வைரஸ் பற்றி விழிப்புணர்வு…!

சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் கொரானா வைரஸ் பற்றி விழிப்புணர்வு…!

சிவகங்கை மாவட்டம்,மதகுபட்டி காவல் நிலையத்தின் சார்பாக இன்று(24-3-2020) மதகுபட்டி, ஒக்கூர், கீழப் பூங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கொரானா விழிப்புணர்வு மற்றும் 144 தடை உத்தரவு பற்றி விழிப்புணர்வு.

★ கை கொடுக்கக்கூட பயம். எதிரில் நின்று பேச பயம். வெளியே செல்ல பேருந்து ஆட்டோ என எதிலும் போக பயம். யார் இருமினாலும் தும்மினாலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என பயம். எல்லாம் “பயம் மயம்”.

★ கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்படுகிறதோ இல்லையோ, அதன் மீது இருக்கும் பயத்தையும் நாம் நிஜம் என்று நம்பிக் கொண்டிருக்கிற சில விஷயங்களையும் முதலில் கைவிட்டாக வேண்டும். இல்லையேல், பயமே நம்மை தின்றுவிடும்.

★ முதலில் தேவையில்லாமல் கவலைப்படுவதை நிறுத்தி விட்டு ஆரம்பகட்ட தடுப்பு முறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்தாலே போதுமானது

★ மாற்று மருந்து என்ற பெயரில் இத சாப்பிடுங்க அத சாப்பிடுங்க என்று சொல்வதையெல்லாம் நம்பிக் கொண்டு எதையும் முயற்சிக்க வேண்டாம். அரசு சுகாதாரத்துறையின் அறிவுரைகளை மட்டுமே நம்புங்கள், கடைபிடியுங்கள்.

★ கொரோனா தொற்றிலிருந்து தப்ப ஆன்டி-பயாடிக்ஸ் சாப்பிடாதீங்க. ஆன்டி-பயாடிக்ஸ் பாக்டீரியாக்கள் மூலம் பரவும் நோயை மட்டுமே குணப்படுத்தும்.

★ பயணம் செய்வதைக் கட்டாயமாக தவிர்ப்பதே நல்லது. விடுமுறை என்று உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு செல்வதை தவிர்க்கவும். மிக அவசியமாக பயணம் செய்ய வேண்டி இருந்தால் தக்க முன்னெச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

★ கூட்டம் நிறைந்த பொது இடங்களான மால், தியேட்டர், கபே, ரெஸ்ட்டரண்ட் போன்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

★ கொரோனா நமக்கு வந்து விடுமோ என்ற பயத்தினாலேயே மன உளைச்சல்கள் உண்டாகின்றன. எதையும் எதிர்கொள்ளும் மன தைரியத்தை வளர்த்து, பயத்தைத் தூர வீசியடியுங்கள்.

★ கொரோனா தீவிரமாகப் பரவி வரும் இந்த சூழலில் அதன் மீதிருக்கும் பயத்தை விட்டொழித்து அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தும் முன்னெச்சிரிக்கைகளை முழுமையாக கடைபிடித்து நலமுடன் வாழ்வோம்.

ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.

Leave a Reply

Your email address will not be published.