புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலாயி என்ற கூலி தொழிலாளி தன் மகளுடன் வசித்து வருகின்றார். இவருக்கு வாய்பகுதியில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இவரது பெண் அருகில் உள்ள கடையில் வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுவிட்டது. இதனால் வேலையிழந்த பெண் தன் தாயின் மருத்துவ செலவிற்கும்¸ சாப்பாட்டிற்கும் பணமில்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வருண்குமார்¸ இ.கா.ப அவர்கள் இராமநாதபுரம் உட்கோட்ட காவல்நிலைய தனிப்பிரிவு உதவி ஆய்வாளருக்கு புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ உதவிகளை செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வேலாயியை இராமநாதபுரம் அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் அவருக்கு முதற்கட்ட பரிசோதனை அங்கு முடிக்கப்பட்டு பின்னர் புற்று நோய் எந்த அளவில் பரவி உள்ளது என்பதை ஸ்கேன் செய்து அறிய மதுரைக்கு அழைத்து செல்லப்பட உள்ளார். இவை அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வேண்டுகோளின் படி கட்டணமில்லாமல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.