புதுச்சேரியில், பிரெஞ்சு தூதரக முன்னாள் அதிகாரியின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்களைக் கொண்டு விற்க முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலியன் என்ற அந்த முன்னாள் அதிகாரிக்கு, பிரான்சுவா மார்த்தேன் வீதியில் பூர்விக நிலம் உள்ளது. 16 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்க முயற்சிகள் நடப்பதாக, சாரம் பத்திரப்பதிவு துறையினர் மூலம் ஜூலியனுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, போலி பத்திரம் தயாரித்து நிலத்தை விற்க முயன்றதாக, நெல்லித்தோப்பு கிருஷ்ணமூர்த்தி, அவ்வை நகர் பாமா பரமேஸ்வரி, முத்தியால்பேட்டை அலெக்சாண்டர் ஜோசப், விழுப்புரம் மாவட்டம் சீனுலோகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.