டெல்லியில் கஞ்சா, எல்.எஸ்.டி. ப்ளாட்டர்ஸ் ((LSD blotters)) போன்ற போதைப் பொருட்களை வைத்திருந்த பிரபல கல்லூரிகளின் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
DTDC கொரியர் சர்வீஸ் மூலம், ஜெய்ப்பூருக்கு எல்.எஸ்.டி ப்ளாட்டர்ஸ் அனுப்பப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்று ஆய்வு நடத்திய அதிகாரிகள், 3 எல்.எஸ்.டி. ப்ளாட்டர்ஸ் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இந்து கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் போதைப் பொருளை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்திய ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகம், இந்து கல்லூரி, அமிதி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேரைக் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.