தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S அவர்கள் மற்றும் சென்னை காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் I.P.S அவர்கள் ஆணைப்படி O.M.R துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் திரு.ம.வெங்கடேஷன் அவர்கள் துரைப்பாக்கம் சிக்னல் அருகில் வாகனசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு உத்தரவுபடி வாகன ஓட்டிகளிடம் முதலில் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் முககவசம் ,அடையாள அட்டை இருக்கிறதா என்றும் சரியான படிசோதனை நடத்துகின்றனர். நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு பற்றி மிகவும் அன்பாக கூறுகிறார். வாகன ஓட்டிகளான பெண்களிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் விசாரித்து வாகனங்களை செல்லுமாறு அனுமதிக்கிறார். இதுமட்டுமின்றி போக்குவரத்து காவலர்களும் அரசு உத்தரவுபடி பணியாற்றுகின்றனர்.நமது செய்தியாளர் வாகன ஓட்டிகளிடம் கேட்கும்போது மரியாதையாகவும் கொரோனா விழிப்புணர்வு மற்றும் நல்ல அரசாங்க சம்பந்தமான அறிவுறை கூறியும் அனுப்புகின்றனர்.COVOID 19 144 தடையை மீறுவர்களிடம் இருந்து வாகனம் அரசு உத்தரவுபடி பறிமுதல் செய்கின்றனர்.இப்படி தன்னுடைய குடும்பத்தை மறந்து காவல்பணியை இரவு பகல் பாராமல் அனத்து அவமானங்களையும் ஏற்றுகொண்டு மக்கள் பணியை நேர்மையாகவும் தியாகமாக செய்து வருகிறார் துரைப்பாக்கம் காவல்துறை ஆய்வாளர் திரு.ம.வெங்கடேஷன் அவர்கள் இவை அனைத்தும் நேர்ல் சென்று சேகரித்தவை .
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக செய்தியாளர் T.பிரபு தென்சென்னை மாவட்டம்