புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு வாகனங்களை இயக்க போக்குவரத்து காவல்துறை சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி 31 ம்தேதி மதியம் 2 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 7.30 மணி வரை கடற்கரை சாலை உள்ளிட்ட ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி வரும் கார்கள் பாரதிதாசன் மகளிர் கல்லூரி வளாகத்திலும், இருசக்கர வாகனங்கள் பழைய சாராய ஆலை வளாகத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மார்கமாக புதுச்சேரி வரும் கார்கள் புதிய துறைமுக வளாகத்திலும், இருசக்கர வாகனங்கள் பெத்திசெமினார் பள்ளி வளாகத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.