Police Department News

மதுரை கல்மேடு மற்றும் விரகனூர் பகுதிகளில் சட்ட விரோதமான மது பானம் விற்பனை செய்த நபர்கள் கைது, மது பாட்டில்கள் பறிமுதல்

மதுரை கல்மேடு மற்றும் விரகனூர் பகுதிகளில் சட்ட விரோதமான மது பானம் விற்பனை செய்த நபர்கள் கைது, மது பாட்டில்கள் பறிமுதல்

சுதந்திர தின விழா, மற்றும் முழு ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்திற்கு விரோதமாக மது பான பாட்டில்கள் விற்பனை செய்வது மதுரை மாவட்டம் முழுவதும் அதிகரித்துள்ளது, ஆகவே மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .சுஜித்குமார் அவர்களின் உத்தரவின்படி சட்ட விரோதமான மதுபான பாட்டில் விற்பனையை தடுக்க, சிலைமான் காவல் துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே கல்மேடு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மது பான பாட்டில்கள் விற்பனை செய்வதாக சிலைமான் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. கார்த்திக் அவர்கள் கல்மேடு பகுதியில் சோதனை செய்தார் அப்போது அங்குள்ள குப்பை மேட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிலைமான் காவல் துறையினர் சட்டத்திற்கு புறம்பாக மது பானம் விற்பனை செய்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கல்மேடு பகுதியை சேர்ந்த கருப்பையா தேவர் மகன் போஸ் வயது 67/2020, என்பது தெரிய வந்தது, மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 920 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர், மேலும் விற்பனை செய்து கைவசம் வைத்திருந்த ரூபாய் 2300 கைபற்றினர்,

கைவசம் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டிகளில் எந்த வித லேபிள் இல்லாமலும் பாட்டில் மூடியை திறந்து நுகர்ந்து பார்த்ததில் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய விஷ நெடியுடன் கூடிய மது பானங்கள் இருந்தது. எனவே அவர் மீது TNP Act 4(1)(A), 4(1)(i) படி வழக்கு பதிவு செய்து , அவரை கைது செய்தனர்.

மேலும், 16 ம் தேதி மதியம் சுமார் ஒரு மணியளவில் விரகனூர் பகுதியில்மீண்டும் ரோந்து பணியில் சார்பு ஆய்வாளர் கார்த்திக் காவலர்களோடு சென்ற போது அங்கு மகாராஜா நகர், வாட்டர் டேங்க் அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்ததில் அவர் குமரேசன் மனைவி அழகுலெக்ஷிமி வயது 47/2020, என தெரிய வந்தது. அவரிடமிருந்து 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர், மேலும் அவர் விற்பனை செய்து வைத்திருந்த பணம் ரூபாய் 500/−யை கைபற்றி அவரை கைது செய்தனர்.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.