அமெரிக்காவில் இருந்து கொண்டு, போலி டெபிட் கார்டு மூலம் அடையாரில் கைவரிசை.
தடுத்து நிறுத்திய காவல் துறை
சென்னையை சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி பெனுகர் என்பவரின் வங்கி கணக்கில் ரூபாய் 46000/− செலவழிப்பதாக குறுந்தகவல் வந்ததையடுத்து அடையார் காவல் துணை ஆணையர் திரு. V.விக்ரமன் IPS அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது, அவரின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற் கொண்டதில் , போலி டெபிட் கார்டு மூலம் மோசடி செய்த நபர் அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் இருந்து கைவரிசையைக் காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடி நபர் வாங்கிய பொருள் டெலிவரி ஆவதற்கு முன் விரைவாக சம்பந்தப்பட்ட வங்கி மூலம் அமெரிக்காவிலுள்ள நிறுவனத்தை தொடர்பு கொண்டு பணப் பரிவர்த்தனையை தடை செய்து , பாதிக்கப்பட்டவருக்கு பணத்தை மீட்டு கொடுக்கப்பட்டது.
24 மணி நேரத்திற்குள் காவல் துறையையும் , வங்கியையும் அனுகினால் பணத்தை மீட்க முடியும் என்று துணை ஆணையர் அவர்கள் கூறினார்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி