Police Department News

தூத்துகுடி மாவட்ட காவல் துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கையாக திருநங்கைகள், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கபசுர குடி நீர், முகக்கவசம் மற்றும் அரிசிப்பை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

தூத்துகுடி மாவட்ட காவல் துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கையாக திருநங்கைகள், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கபசுர குடி நீர், முகக்கவசம் மற்றும் அரிசிப்பை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு பொது மக்களுக்கு பல் வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி கபசுரக்குடி நீர், முகக்கவசம், வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று 06/09/2020 ஞாயிறு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக குரூஸ்பர்னந்து சிலை சந்திப்பில் பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயகுமார் அவர்கள் கலந்து கொண்டு திருநங்கைகள், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கபசுரக்குடி நீர், முககவசம், மற்றும் அரிசிபைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயகுமார் அவர்கள் பேசுகையில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு தளர்தப்பட்டுள்ளது, நாளை முதல் ரயில்கள் மற்றும் பேரூந்துகள் இயக்கப்படுவது உட்பட அரசு பல்வேறு தளர்வுகள் அளித்துள்ளது. இருப்பினும் பொது மக்கள் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் பொது மக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திருநங்கைகள் பிழைப்புக்கு வழியில்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது திருநங்கைகளிடம், உங்கள் அனைவரின் கல்வி தகுதி மற்றும் இதர விபரங்களை தமது அலுவலகத்தில் வந்து தெரிவிக்குமாறும், கல்வித் தகுதி ஏதும் இல்லாதவர்களும் தங்கள் விபரங்களை தெரிவிக்கலாம் எனவும் அவர்களுக்கு தகுந்தாற் போல் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் அவர்கள் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு. கனேஷ், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஜெயபிரகாஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர்கள் திரு ராஜாமணி, திரு காமராஜ், உள்ளிட்ட காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.