பல்வேறு திருட்டு வழக்குகளில் ஆஜராகமல் தலைமறைவாக இருந்தவரை தல்லாகுளம் போலீசார் கோவையில் கைது செய்தனர். இவர் மீது மதுரை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. இவை தவிர 55க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் கோர்ட்டில் ஆஜராகமல் பத்தாண்டுகளாக்கு மேலாக தப்பி வந்தார். இவரை பிடிக்க தல்லாகுளம் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் தேடி வந்தனர். விசாரணையில் கோவையில் தங்கிய இருப்பதாக தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் கைது செய்து மதுரை கொண்டு வந்தனர்.
போலீஸ் எனக்கூறி வீட்டில் புகுந்து துப்பாக்கி முனையில் 170 சவரன் நகை, பணம் கொள்ளை..! மதுரை கூடல்புதூரில் பகுதியில் ஒப்பந்ததாரரான குணசேகரன் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு சென்ற சிலர் தங்களை போலீஸ் என கூறிக்கொண்டு உள்ளே சென்றனர். பின்னர் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து வீட்டில் இருந்தவர்களை மிரட்டினர். துப்பாக்கி முனையில் 170 சவரன் நகைகள், 2.8 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை அக்கும்பல் எடுத்துச் சென்றது. […]
ரேசன் அரிசி கடத்தியவர்கள் குண்டாசில் கைது ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மதுரை அனுப்பானடி வினோத் என்ற ராஜவேலு வயது 28/2021, சக்கிமங்கலம் அருண்பாண்டியன் வயது 38/2021, ஆண்டார்கோட்டாரம் சதீஷ்குமார் ஆகியோரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலிசார் கைது செய்தனர் இவர்களில் வினோத் என்பவரை எஸ்.பி., பாஸ்கரன் அவர்கள் இன்ஸ்பெக்டர் பரிந்துரையின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அனிஸ்சேகர் உத்தரவிட்டார்.
மதுரை மாநகர் சாரதி இல்லம், சோலையழகுபுரம் 2வது தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருடைய மகன் சீனிவாசபெருமாள் 24/2019, என்பவர் மதுரை மாநகரில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (28.11.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் சீனிவாசபெருமாள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.