Police Department News

இன்று 8 ம் தேதி, தூத்துகுடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 22 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்கள் பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்

இன்று 8 ம் தேதி, தூத்துகுடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 22 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்கள் பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர் கொண்டு பொதுமக்களை காப்பதில் முன் களப்பணியாளர்களில் காவல் துறையினரின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் திரு ஞாதோஸ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய காவலர் திரு. செந்தில்குமார், தூத்துக்குடி மத்திய போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலர் திரு. செல்வராஜ், வடபாகம் காவல் நிலையம் பெண் காவலர் தங்கபூபதி, புதியம்புத்தூர், காவல் நிலைய தலைமை காவலர் திரு. வீரப்பெருமாள், திருசெந்தூர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு. மாரிச்செல்வம், காவலர் திரு. குசன், ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு முகமதுபைசல், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பாபுராஜ், பெண் தலைமை காவலர் திருமதி கல்பனா, ஶ்ரீவைகுண்டம் அனைத்து மகளீர் காவல் நிலைய தலைமை காவலர் ஆனந்தபூமாரி, மணியாச்சி காவல் நிலைய பெண் முதல் நிலை காவலர், திருமதி. பாரதி, கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முருகன், மாசார்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சத்தியசீலன், நாசரேத், சிறப்பு உதவி ஆய்வாளர். திரு. முருகன், தூத்துக்குடி ஆயுதப்படை பெண் முதல் நிலை காவலர் திருமதி. பபிதா, காவலர்கள் காளிராஜ், திரு. முத்துக்கிருஷ்ணன், திரு. ராஜ், திரு. முகமதுசபிக், திரு. சந்தோஷ்குமார், ஆகியோர் களப்பணியாற்றும் போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.

மேற்படி 22 காவல் துறையினருக்கு இன்று 8 ம் தேதி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. .ஜெயக்குமார் அவர்கள் பழக்கூடை வழங்கி கொரோனா தொற்று நோய் மக்களுக்கு பரவாமல் தடுக்க தைரியமாக தாங்கள் முன் வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றி னீர்கள், அப்பணியில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி தற்போது மீண்டு வந்துள்ளீர்கள். சவாலான பணியினை தைரியத்தோடும் அர்பனிப்போடும் தாங்கள் மேற்கொண்டது பாராட்டுதலுக்கு உரியது. தங்கள் துணிவையும், தங்கள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பையும் எண்ணி தூத்துக்குடி மாவட்ட காவல் துறை பெருமிதம் கொள்கிறது, என வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்சியின் போது தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோபி அவர்கள் உடனிருந்தார்.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.