Police Department News

ரேடியோ ஜாக்கிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் ‘கஜல்’ ஸ்ரீநிவாஸ் கைது

ரேடியோ ஜாக்கியாக பணியாற்றும் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக பிரபல பாடகர் ‘கஜல்’ ஸ்ரீநிவாஸை ஹைதராபாத் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தை சேர்ந்தவர் ‘கஜல்’ ஸ்ரீநிவாஸ் (51). பிரபல பாடகரான இவர் தெலுங்கு படங்களில் பாடியுள்ளார். காந்தியத்தை அனைத்து நாடுகளுக்கும் தெரியப்படுத்தும் வகையில் 125 உலக மொழிகளில் காந்தியத்தை கஜலில் பாடினார். இதன் மூலம் 2 முறை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் ஒரு முறை லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார்.

ஹைதராபாத்தில், உள்ள பஞ்சகுட்டா பகுதியில் இவர் இணையதள வெப் ரேடியோ நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வரும் பெண் கொடுத்த புகாரின்பேரில், நேற்று மதியம் கஜல் ஸ்ரீநிவாஸை பஞ்சகுட்டா போலீஸார் கைது செய்தனர். நாம்பல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 12-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.