மனித நேயமிக்க மக்கள் பணியில் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேசன் அவர்கள்
கொரோனாவை பற்றி எந்தவித அச்சமின்றி மக்கள் வாகனத்தில் இரண்டு மூன்று பேர் முககவசம் ஹெல்மெட் சமூக இடைவெளி பின்பற்றாமல் சாலையில் செல்கின்றனர்.துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேசன் அவர்கள் தினமும் வாகன தணிக்கை செய்யும் போது ஒவ்வொருவருக்கும் தன்னுடைய அனுபவத்தின் மூலமாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் உயிரை பற்றியும் சாலையில் செல்லும் போது சாலை விதிகளை பின்பற்றும் படியாகவும் நல்ல அறிவுரைகளை வழங்கி வருகிறார்.அதுமட்டுமன்றி பெண்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் விபத்து ஏற்ப்பட்டால் அந்த குடும்பம் படும் தவிப்பு பற்றியும் மிகவும் தெள்ளத் தெளிவாக அறிவுரை வழங்கி வருகிறார்.தன்னுடன் பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு தினமும் சத்தான உணவு கபூசூர குடிநீர் மற்றும் உற்சாகமும் தைரியமும் கூடிய அறிவுரைகளை வழங்கி வருகிறார்.பொதுமக்களிடம் கனிவான பேச்சும் சாலை விளக்குகள் சிக்னல் ஆகியவை சரியான படி இயங்குகிறதா என்றும் ரோந்து பணி போன்றவைகளை தினம்தோறும் ஆராய்ந்து சரிபார்ப்புக்கு பிறகு வாகனத்தை சாலையில் அனுமதிக்கிறார்.இப்படிபட்ட நன்மையான செயல்களில் ஈடுபட்டு போக்குவரத்து காவல்துறைக்கு எடுத்துகாட்டாக விளங்கிவருகிறார் ஐயா திரு.வெங்கடேசன் அவர்கள் .