தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று சூதாட்டம் ஆடிய 5 பேர் கைது – சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூபாய் 250/- பறிமுதல்.
கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (22.05.2021) எஸ்.ஐ. காந்திமதி அவர்கள் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது வண்ணாவூரணி குளத்துக் கரை அருகில் கழுகுமலை கிட்டாங்கித் தெருவைச் சேர்நத பெரியசாமி மகன் மாரியப்பன் (44), அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டவர் மகன் மாரியப்பன் (48), அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் சுப்பிரமணியன் (42), அதே பகுதியைச் சேர்ந்த காட்டுநாயக்கர் தெருவைச் சேர்ந்த காளியப்பன் மகன் சின்னத்தம்பி (38) மற்றும் ஆறுமுகநகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சுரேஷ் என்ற சுடலைமுத்து (32) ஆகிய 5 பேரும் பணத்திற்காக சட்டவிரோதமாக சீட்டுக் கட்டுகளை வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. ஆகவே போலீசார் மேற்படி 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய். 250/- மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.