Police Department News

தமிழக காவல் துறையினருக்கு யோகா பயிற்சி

தமிழக காவல் துறையினருக்கு யோகா பயிற்சி

தமிழக காவல் துறையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஸ்குமார் அகர்வால் IPS அவர்கள் காவல் துறையில் பணி புரியும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அனைவரின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை அனைவரும் மன அழுத்தமின்றியும், மனமகிழ்சியுடன் பணிபுரிய யோகா பயிற்சியினை ஏற்பாடு செய்துள்ளார்.

சென்னை பல்கலை கழகத்தில் மேலாண்மை பேராசிரியராக பணிபுரியும் மதிப்பிற்குறிய காவல் ஆணையாளர் அவர்களின் துணைவியார் Dr.Vanitha Aggarwal அவர்கள் Ms.Nrithya Jaganathan , Director of Krishnamachary yoga mandiram, Ms.Rinkumachari, President of FICCI FLO யோகா பயிற்சியாளர் ஆண்டாள் ஆகியோருடன் இணைந்து காவல் துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக யோகா பயிற்சியினை இணையதளம் மூலமாக இன்று (19/09/2020) துவக்கி வைத்துள்ளார்.

இந்த யோகா பயிற்சி வகுப்பானது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையாளர் திருமதி. H.ஜெயலட்சுமி அவர்களால் வரவேற்புரை வழங்கி ஆரம்பிக்கப்பட்டது. இப்பயிற்சியே Dr.Vanitha Aggarwal அவர்கள் காவல் துறையில் பணிபுரியும் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு எந்த நேரத்திலும் பணிபுரிய ஏதுவாக மகத்தான இந்த யோகா பயிற்சியே பிரத்தியேகமாக ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இந்த யோகா பயிற்சியானது ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 5 மணிவரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியின் முதல் கட்டமாக இன்று யோகா பயிற்சியின் நன்மைகள் குறித்தும், எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்து மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த மூச்சு பயிற்சியானது அனைவருக்கும் நெகிழ்சி மற்றும் மன நிறைவை தந்தது.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர், திரு மகேஸ்குமார் அகர்வால் IPS, Dr. Vanitha Aggarwal, Ms.Nrithya Jagnathan, Ms.Rinkumecheri மற்றும் ஆண்டாள் ஆகியோருக்கும் காவல் துணை ஆணையாளர் திருமதி. H.ஜெயலெட்சுமி அவர்கள் நன்றியுரை கூறி பயிற்சியை முடித்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.