Police Department News

பயணிகள் ரோட்டை கடக்கும்போது வாகனங்கள் இடது புறம் செல்ல தடை மதுரை போக்கு வரத்து போலீசார் நடவடிக்கை

பயணிகள் ரோட்டை கடக்கும்போது வாகனங்கள் இடது புறம் செல்ல தடை மதுரை போக்கு வரத்து போலீசார் நடவடிக்கை

மதுரை மாநகரில் போக்குவரத்தை சீர் செய்வதில் மதுரை போக்கு வரத்து காவலர்கள் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு பயணிகள் சாலையை கடந்து செல்ல முடியாத அளவுக்கு வாகன போக்கு வரத்து உள்ளது.

இங்குள்ள சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது வாகன ஓட்டிகள் இடது புறமாக தொடர்ந்து செல்வதால் ரயில் நிலையத்திலிருந்து வரும் பயணிகள் பெரியார் பஸ் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலைமை இருந்து வந்தது. அணிவகுத்து வரும் வாகனங்களுக்கு இடையே மக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதை கவனத்தில் எடுத்த பெரியார் பஸ் நிலைய போக்கு வரத்து காவல் ஆய்வாளர் திரு. நந்தகுமார் அவர்கள் பெரியார் பஸ் நிலையம் அருகில் பயணிகள் சாலையை கடந்து செல்லும் இடத்தில் சிக்னல் நேரத்தில் வாகன ஓட்டிகள் இடதுபுறமாக செல்ல தடை விதித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

இந்த நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பஸ் நிலையத்துக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

போக்கு வரத்து போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.