சட்டவிரோதமாக இளையான்குடி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது..!!!
24.09.2020 அன்று சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கீழாயூர் காலனி பகுதியில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பிரபாகரன் அவர்கள் ரோந்து சென்ற போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த ஜாபர் அலி, ராஜா என்பவர்கள் மீது பிரிவு 8(c) r/w.20(b),(ii)(b) NDPS Act -ன்படி வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 1கிலோ 350 கிராம் கஞ்சா ரூ. 10000/-யை பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா போன்ற போதை பொருள்களை இன்றைய கால இளைஞர்கள் அதிகமாக போதை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்..!!!
கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்களில் அதிகமானோர் மனநல பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் சிலர், நண்பர்களின் உந்துதல், போதைப் பொருள்களைப் பற்றிய தவறான கருத்துகள், விளையாட்டாக பயன்படுத்துதல் ஆகிய காரணங்களால் போதைக்கு அதிகமானோர் அடிமையாகி வருகின்றனர். போதைக்கு அடிமையாகும் நபர்களின் தன்னம்பிக்கை குறைவதுடன், வேலைத் திறனிலும் பாதிப்பு ஏற்படுகிறது. உடல், மன ஆரோக்கியம் பெரிதும் பாதிப்பதுடன், மாணவர்களின் படிப்புத் திறனும் குறைகிறது. போதையைக் கட்டுப்படுத்த சுயக்கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
கஞ்சா புகையிலை போன்ற போதை பொருள்கள் விற்கப்படுவது தெரிந்தால் உடனே 100 தொடர்பு கொண்டு தெரிவிக்கவும் இது ஒவ்வொருவரின் கடமையாகும்.