தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் காவல் ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கை
மதுரை மாநகர், தெற்கு வாசல் C5, சட்ட ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அனுராதா அவர்கள் அலுவல் சம்பந்தமாக காவல் நிலையத்தில் இருக்கும் சமயம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலை பெற்று, தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உத்தரவு பெற்று சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.S. வன்னியப்பன், திரு. கவிராஜ், திரு. நாகேந்திரன், மற்றும் திரு. ராஜா ஆகியோருடன், மதுரை மாநகர் நவபத்கானா தெருவில் உள்ள க.எண்27/1,பு.எண் 79, என்ற முகவரியில் உள்ள தவமணி மகன் மலையரசு வயது 39/2020, அவர்களின் வீட்டின் முன்பு சென்று பார்த்த போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் சாக்கு மூடைகளில் ஒன்றை மலையரசு அவர்கள் TN 64 B 5379 (TVS XL SUPER) என்ற பதிவு எண் கொண்ட இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தார் உடனே அவரிடம் இது பற்றி விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தவர் பின்பு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களுரிலிருந்து மொத்தமாக இனம் தெரியாத வியாபாரிகளிடம் வாங்கி வந்து மதுரை நகர் முழுவதும் உள்ள சிறு வியாபாரிகளுக்கு எனக்கு சொந்தமான TN 64 B 5379 (TVS XL SUPER) வாகனத்தில் கொண்டு சென்று அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வருவதாக கூறினார். மேற்படி பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை 16/09/2020 ம் தேதி காலை 7 மணிக்கு பறிமுதல் செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, துணை இயக்குனர் அவர்களிடம் இந்த வழக்கை ஒப்படைக்கப்பட்டது.