Police Department News

மதுரையில், சாலையோர கடைக்கு அனுமதி வாங்கித் தருவதாக கூறி 1.5 லட்சம் ரூபாய் மோசடி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கைது

மதுரையில், சாலையோர கடைக்கு அனுமதி வாங்கித் தருவதாக கூறி 1.5 லட்சம் ரூபாய் மோசடி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கைது

மதுரை மாநகர், பொன்னகரம், 2 வது தெரு டோர் நம்பர் 15 ல் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் வடிவேல் மகன் கோவிந்த ராஜ் வயது 57/2020, இவர் மதுரை நகரப் பகுதியில் மாநகராட்சி பெட்டிக்கடை ஒன்று வைத்து நடத்த எண்ணினார், இதனை தொடர்ந்து, மதுரை, பழைய ஆஸ்டின்பட்டி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு கதவு எண். 287/1, ல் வசித்து வரும் குருசாமி மகன் ராஜேந்திரன், இவர் மதுரை மாநகராட்சி வார்டு நம்பர் 79 ல் துப்பரவு பணி ஆய்வாளராக பணி புரிகிறார், இவரை தொடர்பு கொண்டு மதுரையில் மெயினான ஏரியாவில் ஒரு மாநகராட்சி பெட்டிக்கடை ஒன்று வேண்டும் என கேட்டுள்ளார், அவரும் வாங்கித்தருகிறேன், மதுரை, டவுன்ஹால் ரோடு, கனரா வங்கி அருகே கடை வைக்க பெட்டி வாங்கித் தருவதாக கூறி அதற்கு ரூபாய் 2,50,000/− கொடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார், அதனை தொடர்ந்து அவரும் சம்மதித்து மதுரை, தெற்கு ஆவணி மூல வீதி மேட்டுக்கம்மாள தெரு கதவு எண்.21/2,, அவருடைய அண்ணன் கடையில் வைத்து ரூபாய் 1,50,000 த்தை கொடுத்துள்ளார், அதன் பிறகு அவர் கூறியபடி கடையை வாங்கிக் கொடுக்கவில்லை, எனவே கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது, அவரை ஏமாற்றும் நோக்கத்தோடு, பணத்தை தராமலும், மேலும் பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விட்டுள்ளார், எனவே கோவிந்த ராஜ் அவர்கள் அஞ்சி தெற்கு வாசல் B5,குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரை பெற்றுக்கொண்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி சக்குபாய் அவர்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டார்,

காவல் ஆய்வாளர் திருமதி சக்குபாய் அவர்களின் உத்தரவின்படி, சார்பு ஆய்வாளர் திரு. அருள் பாஸ்கள் அவர்கள் IPC 406, 420, 506(1) பிரிவின்படி வழக்குப் பதிவு செய்து, விசாரித்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினார், அதன்பிறகு நீதி மன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்

Leave a Reply

Your email address will not be published.