மதுரை, முனிச்சாலையில், சிறார் சீர்நோக்கு இல்லத்தில் சிறார்கள் ரகளை, ரூபாய் பத்து லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம், நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு, யாரும் கைது இல்லை
மதுரை, முனிச்சாலைப் பகுதியில் சிறார் சீர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 40 க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புள்ள சிறார்கள் பயின்று வருகிறார்கள் .
இவர்களில் சிலர் ஜாமின் கேட்டும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு 36 சிறார்கள் ரகளையில் ஈடுபட்டனர், இதன் மூலம் இல்ல வளாகத்தில் இருந்த எல் இ டி டிவி, கம்யூட்டர் லைட் உள்பட சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுதினர் மேலும் இளம் சிறார்களையும் தாக்கினர், தகவல் அறிந்த மதுரை மாநகர் சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் திரு சிவப்பிரசாத் அவர்கள் நேரில் வந்து விசாரணை செய்தார். மேலும் தெப்பக்குளம் B3, காவல் நிலையத்தில் கண்காணிப்பாளர் திருமதி சகீலாபானு அவர்கள் ரகளையில் ஈடுபட்ட 18 சிறார்களின் மீது புகார் அளித்துள்ளார், அதாவது 1)ஜோதிவேல் மகன் ஹரீஸ்,
2) முனியாண்டி மகன் முத்து சூரியா,
3) திருகுமரன் மகன் சூரியா,
4)தங்கம் மகன் அருண்குமார்,
5)தேசிங்ராஜன் மகன் சுதீப்,
6)முத்து கருபபன் மகன் தரண்குமார்,
7)ராமலிங்கம் மகன் சரவணப்பெருமாள்,
8)கிருஷ்ணன் மகன் லோகேஸ்,
9) அண்டா கனேசன் மகன் செல்லப்பாண்டி,
10) முத்துமணி மகன் சபரிராஜன்,
11) அண்பழகன் மகன் மெர்சல்,
12) கனேசன் மகன் மணிகண்டன்,
13) லட்சுமணன் மகன் சதீஸ்குமார்,
14) பிச்சைமணி மகன் கோபால்,
15) மாமுண்டி மகன் கிருஷ்ணா,
16) குமார் மகன் பெரியசாமி என்ற வீர் பெரியசாமி,
17) கிருஷ்னமூர்த்தி மகன் ஆகாஷ்,
18) சசிகுமார் மகன் அர்ஜுன் (இவர்கள் கைது இல்லை) இந்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது, ஆனால் யாரையும் கைது செய்யவில்லை, மேலும் மாவட்ட முதன்மை நீதிபதி நஜினாபானு அவர்கள் நேரடியாக இல்லம் வந்து ஆய்வு செய்தார்கள். இனி வரும் காலங்களில் இது போன்று குற்றங்கள் நடக்காமல் இருக்க, ரகளை செய்த 18 சிறார்களையும் திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி ஆகிய ஆகிய இடங்களுக்கு இட மாறுதல் செய்தார்கள்