மதுரை, சிம்மக்கல், பகுதியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை திலகர் திடல் போலீசார் விசாரணை.
மதுரை, திலகர் திடல் C4, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான சிம்மக்கல் ஒர்க்ஷாப் ரோடு, தேவி தியேட்டர் காம்ளக்ஸில் வசித்து வருபவர் ரெங்கநாதன் மனைவி அமுதா வயது 52/2020, இவர் குடும்பத்துடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறார்
இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர், மகன் வினோத் கண்ணன் சென்னை நுங்கம்பாக்கத்தில் மாருதி சுஜிகி கார் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிகிறார், மகள் யோகலட்சுமி பெங்களூரில் வழக்கறிஞருக்காக LLB இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் , கணவர் ரங்கநாதன் அவர்கள் தெற்காவணி மூல வீதியில் ஆதீனம் கட்டிடத்தில் வினாயகா காம்ளக்ஸில் கடந்த 35 வருடங்களாக ஶ்ரீ நாதன் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருகிறார், இவர் சிவகங்கை, அருப்புகோட்டை, எட்டையாபுரம் ஆகிய இடங்களுக்கு சென்று நகை வியாபாரம் செய்து வந்தார் தற்போது கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய் தொற்று பரவல் காரணத்தால் தொழில் மிகவும் மோசமானதால் ஏற்பட்ட கடன் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தார் கடந்த 08/10/2020 ம் தேதி இரவு வழக்கம் போல் 8.30 மணிக்கு வீட்டிற்கு வந்தவர் தன் மனைவியிடம் இரவு உணவிற்கு பின் 11 மணிவரை பேசிக்கொண்டிருந்தார் அப்போது வியாபாரம் மந்தமாக இருப்பதாக கூறி ஆதங்கப்பட்டார்.
அதன் பிறகு மனைவி, மருமகள், பேரக்குழந்தைகள் தனியே படுக்க சென்று விட்டனர்.
09/10/2020 ம் தேதி அதி காலை 4.15 க்கு மனைவி எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் நடு ஹாலில் தொட்டி கட்டும் கிளாம்பில் வெள்ளை நூல் கயறால் கழுத்தில் தூக்குப் போட்டு பேச்சு மூச்சற்ற நிலையில் தொங்கிக் கொண்டிருந்தவரை பர்த்து சத்தம் போட மகளும் மருமகளும் அக்கம் பக்கத்தினரும் வந்து உடலை இறக்கி பார்த்து, 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து அவர்கள் வந்து பார்த்தபோது இறந்து விட்டதாக சொல்லி சென்றனர்,
கொரோனா நோய் தொற்று காலத்தில் வியாபாரம் மந்தமாக இருந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தால் ஏற்பட்ட கடனை நினைத்து மன உளைச்சலில் இருந்து வந்தவர், தனக்கு தானே தூக்குப் போட்டு இறந்துள்ளார்.
இவர் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் சட்டப்படி விசாரணை நடத்தி அவர்களின் குல வழக்கப்படி உடலை நல்லடக்கம் செய்ய அனுமதி கேட்டு புகார் மனுவை இறந்தவரின் மனைவி திலகர் திடல் C4, காவல் நிலையத்தில்அளித்தார், புகார் மனுவை பெற்றுக் கொண்ட காவல் நிலைய ஆய்வாளர் திருமதி கவிதா அவர்கள் விரைந்து விசாரனை நடத்தினார்.
ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்களின் உத்தரவின்படி, சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. மகாமாயன் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.