Police Department News

பானாவரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்டா புத்தகம் மூலம் மூத்த குடிமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான அரிசி, பழங்கள்,காய்கறிகள், கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் ஆகியவற்றை வழங்கினார்.

பானாவரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்டா புத்தகம் மூலம் மூத்த குடிமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான அரிசி, பழங்கள்,காய்கறிகள், கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் ஆகியவற்றை வழங்கினார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களின்(Senior Citizens) பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களுக்கு உதவும் விதமாகவும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களால் கடந்த (28.09.2020) ” WE FOR YOU ” (நாங்கள் உங்களுக்காக) என்ற புதிய செயல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 262 மூத்த குடிமக்களை கண்டறிந்து அவர்களது இல்லங்களில் ரோந்து புத்தகம் (Patta Book) வைக்கப்பட்டு,காவல் நிலையங்களில் உள்ள ரோந்து காவலர்கள் தினமும் மூன்று முறை அவர்களின் வீட்டிற்குச் சென்று பட்டா புத்தகத்தில் கையொப்பமிட்டும், அந்த பட்டா புத்தகத்தில் வைக்கப்பட்டுள்ள Qr-code ஐ ஸ்கேன் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் சேவைகளை செய்யவும், அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கவும் இவ்வமைப்பு உறுதுணையாக இருக்கும்.இதன் தொடர்ச்சியாக, இன்று (22.10.2020) அரக்கோணம் உட்கோட்டம் பானாவரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பனியூர் கிராமம் மற்றும் பானாவரம் கிராம பகுதிகளில் உள்ள மூத்த குடிமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான அரிசி, பழங்கள்,காய்கறிகள், கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் ஆகியவற்றை வழங்கினார். உடன் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மனோகரன் அவர்கள் மற்றும் பானாவரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பாரதி மற்றும் ரோந்து காவலர்கள்.

Leave a Reply

Your email address will not be published.