Police Recruitment

தமிழ்நாடு காவல்துறை மற்றும் திருச்சி மத்திய மண்டல காவல் துறையில் முதல் முறையாக பொதுமக்களுடன் தொடர்பை மேம்படுத்த விர்ச்சுவல் காப் (VIRTUAL COP) என்ற குறுஞ்செயலி அறிமுக விழா.

தமிழ்நாடு காவல்துறை மற்றும் திருச்சி மத்திய மண்டல காவல் துறையில் முதல் முறையாக பொதுமக்களுடன் தொடர்பை மேம்படுத்த விர்ச்சுவல் காப் (VIRTUAL COP) என்ற குறுஞ்செயலி அறிமுக விழா.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.H.M ஜெயராம் இ.கா.ப, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.செந்தில்குமார் (பொ) அவர்களின் மேற்பார்வையில் 10.11.2020 இன்று திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் விர்ச்சுவல் காப் (VIRTUAL COP) என்ற குறுஞ்செயலி தமிழக அளவில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த VIRTUAL COP செயலியானது பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் நோக்கத்துடனும், பொதுமக்களின் குறைகளை துரிதமான முறையில் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுப்பதற்காவும் ஏற்படுத்தப்பட்டது.
பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகிலோ அல்லது அக்கம் பக்கத்திலோ ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இந்த செயலியின் மூலம் தொடர்புகொண்டு தகவலை தெரிவிக்கலாம். தகவலை அனுப்பியவுடன் இதற்கான தனி குழு தகவலை பெற்றுக்கொண்டு, உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த செயலியில் Photos, videos, Messages & Voice message போன்ற தகவலை பதிவிடலாம். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமலே தகவலை பதிவிடலாம். இதன் மூலம் பொதுமக்கள் காவல்துறையை எளிதில் அணுக முடியம் மற்றும் குற்றம் நடைபெறும் இடம் கண்டறியப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்படும்.

Leave a Reply

Your email address will not be published.