Police Department News

மதுரை, வண்டியூர் பகுதியில் சாப்பிட்ட வடைக்கு காசு கேட்டதால், டீ கடையை அடித்து நொறுக்கிய ரவுடிகள்

மதுரை, வண்டியூர் பகுதியில் சாப்பிட்ட வடைக்கு காசு கேட்டதால், டீ கடையை அடித்து நொறுக்கிய ரவுடிகள்

மதுரை மாநகர், அண்ணா நகர்,E3, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வண்டியூர், செளராஷ்ராபுரம் 3 வது தெருவில் வசித்து வருபவர்
A.S.ராஜன் மகன் A.R.சிவகுமார் வயது 28/2020, இவர் ஒரு B.E பட்டதாரி, தனது படிப்பை முடித்து தற்சமயம் வேலை தேடி வருகிறார்
இவருக்கு 3 அண்ணன்மார்கள், மற்றும் ஒரு தம்பியும் உள்ளார்.
இவருடைய அப்பா Ex. கவுன்சிலராக 32 வது வார்டு பகுதியில் இருந்து வந்தார், தற்போது தங்கள் தெருவில் தனது வீட்டிற்கு அருகில் வடைக்கடை போட்டு தொழில் செய்து வருகிறார், இவருக்கு உதவியாக சிவக்குமாரும் கடையை கவனித்து வருகிறார், இந்த நிலையில் கடந்த 12 ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இவரது கடையில் வடை சாப்பிட ஒரு கும்பல் மது போதையில் வந்தது, வடை சாப்பிட்ட பின்பு வடைக்கு காசு கேட்ட போது காசு தர மறுத்து விட்டனர், அதன்பின் மீண்டும் கால் மணி நேரம் கழித்து வடை சாப்பிட வந்தனர், அப்போது முதலில் சாப்பிட்டதற்கு காசு தர வில்லை, இப்போது சாப்பிடும் வடைக்காவது காசு கொடுங்கள் என்றனர், அதற்கு, நாங்களே இந்த ஏரியாவில் பெரிய ரெளடி, எங்களிடமே காசு கேப்பியா என கூறி சிவகுமாரின் தந்தையை இழுத்துப் போட்டு அடித்துள்ளார்கள், மற்றும் சிவகுமாரை செங்கல்லால் தாக்கி இரத்த காயத்தை ஏற்படுத்திய சமயம் அதை தடுக்க வந்த சிவகுமாரின் தம்பி மற்றும் சித்தப்பா ஆகியோரையும் தாக்கி விட்டு கொலை மிரட்டல் விட்டும் தப்பியோடி விட்டனர், உடனே படுகாயமடைந்த சிவகுமார் மற்றும் அவரது தந்தை ஆகியோரை அரசு மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பகுதியில் சேர்த்து சிகிச்சை பெற்று அதன் பின் மதுரை அண்ணா நகர் E3, காவல் நிலையத்தில் ரவுடிகளின் மீது சட்டப்படி நடவடிக்கையெடுக்க கூறி புகார் அளித்தனர், புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் திரு. பூமிநாதன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. மோகன்குமார் அவர்கள் விசாரணை நடத்தியதில் அவர்கள் மதுரை, சக்கிமங்கலம் , முனியாண்டிபுரத்தை சேர்ந்த ராசு மகன் கார்த்திக்,
யாகப்பநகர், சக்திமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார் மகன் வினோத், கருப்புராஜா, காளி என்ற காளீஸ்வரன், சிவா, யாகப்பநகரை செர்ந்த முருகேசன் மகன் சூரியா, கண்ணன் மகன் காளிஸ்வரன், யாகப்பநகர் கருப்பசாமி என தெரிய வந்தது. இவர்களில் கார்த்திக், வினோத், கருப்புராஜா ஆகியோரை கண்டுபிடித்து கைது செய்து, விசாரணை நடத்தி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதி மன்ற ஈத்தரவின்படி சிறையில் அடைத்தனர், மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.