மதுரை, செல்லூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு, செல்லூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
மதுரை மாநகர் D 2, குற்றப்பிரிவு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான செல்லூர், பாலம் ஸ்டேஷன் ரோட்டிற்கு அருகில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் பிரசித்திபெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செல்லூர், ஜான்ஸிராணிபுரம் 2 வது தெருவில் குடியிருக்கும் ஆறுமுகம் மகன் பால்சாமி அவர்கள் பூசாரியாக இருந்து பூஜைகள் செய்து வருகிறார், இந்த நிலையில் கடந்த 14 ம் தேதி தீபாவளியன்று கோவில் பூஜைகளை முடித்து விட்டு மாலை சுமார் 5.30 மணியளவில் கோவில் கதவை அடைத்து விட்டு சென்று விட்டார், மறு நாள் 15 ம் தேதி அதிகாலை சுமார் 4.30 மணியளவில் பூஜை செய்வதற்காக கோவிலை திறக்க வரும் போது கோவில் கிரில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் உடனே கோவில் நிரவாகஸ்தரான செல்லூர் பசு மடம் சந்தில் குடியிருக்கும் குருசாமி மூப்பனார் மகன் அய்யபன் அவர்களிடம் தகவல் சொல்ல உடனே அவர் கோவிலுக்கு வந்து நேரில் பார்த்த போது அங்கிருந்த உண்டியல் திருடு போயிருப்பது தெரிய வந்தது. உடனே செல்லூர் D 2, குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தார், புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் திருமதி. நாகராணி அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார், அப்போது தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த மழையால் அங்கிருந்த cc tv வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது. அதன் பின் நிலையம் வந்து ஆய்வாளர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் மணபாலா அவர்கள் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.