Police Department News

திண்டுக்கல் மாவட்டத்தில் 26.11.2020 அன்று சாலை விதிகளை மீறிய நபர்கள் மீது 2688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது

திண்டுக்கல் மாவட்டத்தில் 26.11.2020 அன்று சாலை விதிகளை மீறிய நபர்கள் மீது 2688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது

27.11.2020 திண்டுக்கல் மாவட்டம்.மாவட்டத்தில் 26.11.2020 அன்று காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 17 வழக்குகளும், சிக்னலில் விதியை மீறியதற்காக 42 வழக்குகளும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தில் சென்றதற்காக 271 வழக்குகளும், மது அருந்தி வாகனம் இயக்கியதாக 03 வழக்கங்களும், பொருட்களை ஏற்றும் வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக 145 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக 930 வழக்குகளும், இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் உட்காரும் நபர் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக 240 வழக்குகளும், மேலும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக 887 வழக்குகளும், இருசக்கர வாகனங்களில் மூன்று நபர்கள் பயணம் செய்ததற்காக 26 வழக்குகளும், இதர சாலை விதிகளை மீறியதற்காக 127 வழக்குகளும் மொத்தம் 2688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் முறையான சாலை விதிகளை கடைபிடித்து பயணம் செய்யுங்கள். சாலை விதியை கடைபிடிக்காமல் செல்வதால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகிறது. என திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.