Police Department News

தமிழ்நாடு ஊர்க்காவல் படை காவலர்களின் கோரிக்கை மற்றும் வேண்டுகோள்

தமிழ்நாடு ஊர்க்காவல் படை காவலர்களின் கோரிக்கை மற்றும் வேண்டுகோள்

27:11:2020 கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு ஊர்க்காவல் படை 1963 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் நேரு அவர்களால் துவங்கப்பட்டது, நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பிற்காக தமிழ்நாடு ஊர்க்காவல் படை துவங்கப்பட்டது, அக்காலத்தில் சேவை மனப்பான்மை உள்ளவர்களை மட்டும் தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்த்தனர், இவர்கள் தமிழ்நாடு காவல் துறையோடு இணைந்து தமிழகம் முழுவதும் சுமார் 16,000 ஊர்காவல் படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கோவில் திருவிழா பாதுகாப்பு பணி, இரவு ரோந்து பணி, காவல் பணி, காவல்துறை சம்பந்தப்பட்ட தபால் விநியோக பணி, காவல் வாகனம் ஓட்டுநர் பணி, பேரிடர் மீட்பு பணி, எனக் காவல்துறையினர் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் 1963 முதல் 2020 இன்று வரை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர், வருமானம் குறைவால் எங்களின் வாழ்க்கை கேள்வி குறியாக இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா, அவர்களால் நாளொன்றுக்கு ரூ.150/- என ஊதியத்தை உயர்த்தி மாதம் முழுவதும் வேலை கிடைத்தால் மாதம் ஒன்றுக்கு ரூ.4500/- கிடைத்தது. பின்னர் G.0. MS .NO.703 Home Police 14 dt.15.09.2017 இந்திய உச்சநீதிமன்ற ஆணைப்படி நாள் ஒன்றுக்கு ரூ.560/- என ஊதியத்தை உயர்த்தியது பின்னர் தமிழக அரசு மாதம் முழுவதும் வழங்கிய வேலையை திடீரென மாதத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை என அறிவித்து உள்ளதால் மாதம் ஒன்றுக்கு ரூ.2800/- மட்டுமே கிடைதது வருகிறது. இந்த குறைந்த ஊதியத்தை வைத்து எங்கள் குடும்பத்தை வழி நடத்த முடியாமல் சுமார் 16.000 ஊர்காவல் படை வீரர்கள் தினறி வருகின்றனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியது, இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படை வீரர்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு பணி மேற்கொண்டனர் இதில் இவர்களது பணி மிகச் சிறந்த பணியாகும் மக்கள் அனைவரும் பாராட்டக்கூடிய வகையிலும் இருந்தது,ஆகவே உச்சநீதிமன்ற ஆணைபடி மற்ற மாநிலத்தில் டெல்லி, பிகார், மந்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், போபால், நேபாளம், கேரளம், பாண்டிச்சேரி,கர்ணாடகம் போன்ற மாநிலங்களில் ஊர்காவல் படை வீரர்களுக்கு ரூ.16.000, 18.000 , 20.000 என மாத ஊதியம் கிடைத்தும், பணி நாட்களை உயர்த்தியது போல் தமிழகத்திலும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மாதம் முழுவதும் 30 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்பது தான் எங்களின் பிரதான கோரிக்கையாகும் ஆகவே தமிழகம் முழுவதும் உள்ள 16.000 ஊர்காவல் படை வீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து ஊர்க்காவல் படை வீரர் சரவணன்

Leave a Reply

Your email address will not be published.