மதுரை, அனுப்பானடி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த நான்கு நபர்கள் கைது பழிக்கு பழி நடக்கவிருந்த கொலையை தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளர்
மதுரை மாநகர் தெப்பக்குளம் B 3,, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு கனேஷன் அவர்கள் குற்றத்தடுப்பு கண்காணிப்பாக கடந்த 8 ம் தேதி அதி காலை சுமார் 6 மணியளவில்
சார்பு ஆய்வாளர் திரு. ஜெயக்குமார், மற்றும் காவல் ஆளினர்களான முதல் நிலைக்காவலர் 2556 திரு. செந்தில், காவலர் 3801 திரு. நம்பிராஜன், காவலர் 2580 திரு. சக்தி ஆகியோர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் போது அனுப்பானடி, உப்புக்காரமேடு, ரயில்வே இரும்புப்பாதை அருகில் சுமார் 7 மணியளவில் சந்தேகப்படும்படியாக கையில் சுருட்டிய வெள்ளை சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்த 4 நபர்களை விசாரிக்க சென்ற போது அவர்கள் அங்கிருந்து ஓட எத்தனித்தனர் அவர்களை பிடித்து நிறுத்தி விசாரித்த போது அவர்கள் முன்னுக்குபின் முரனாக பேசி கடைசியில் அவர்கள் பெயர் விலாசத்தை கூறினர்.அதில் மதுரை, முனிச்சாலை, கான்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குமரேஷன் வயது 19/2020, முனிச்சாலை, இந்திரா நகரை சேர்ந்த சேகர் மகன் தினேஷ்பாபு வயது 20/2020, முனிச்சாலை, இஸ்மாயில் புரத்தை சேர்ந்த தங்கமணி மகன் பாண்டியராஜன் வயது 21/2020, காமராஜர்புரத்தை சேர்ந்த சங்கிலி மகன் சிவனேஸ்வரன் வயது 19/2020 என தெரிய வந்தது, அவர்கள் கையில் சுருட்டி வைத்திருந்த வெள்ளை சாக்கில் 2 வாள், மற்றும் 2 அரிவாள் போன்ற கொடிய ஆயுதங்கள் இருந்தன, மேற்கொண்டு விசாரணையில் அவர்களின் குரூப்பை சேர்ந்த முருகானந்தம் என்பவரை V.K.குருசாமி தரப்பினர் கடந்த மாதம் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்ததால் , அதற்கு பழிக்குப்பழியாக V.K.குருசாமி தரப்பினரைச்சேர்ந்த யாரையாவது அதே போல் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்ய 2 வாள், 2 அரிவாளுடன் இருந்ததாக குமரேஷன் வாக்குமூலம் கொடுத்தான். மேற்படி வாக்குமூலத்தின் அடிப்படையில் நால்வரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஆயுதங்களை கைபற்றி வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.