மதுரை, சுப்பிரமணியபுரத்தில் பெண்னை, செருப்பால் அடித்ததால் விஷம் சாப்பிட்டார், ஜெய்ஹிந்துபுரம் போலீசார் விசாரணை
மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் B6, காவல் நிலையத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம், அரிஜன காலனியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் அழகர் மகள் திருமதி. சக்திமாரி வயது 28/2020, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் வளவன்ராஜுக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்த நிலையில் கடந்த 13 ம் தேதி மதியம் 2 மணியளவில் சக்திமாரியின் அண்ணன் முத்துக்குமாரிடம் முனியராஜ் என்ற வளவன்ராஜ் பிரச்சனை செய்த போது சக்கிமாரி அவர்களை விலக்கி விட்டுள்ளார், அப்போது முனியராஜ் சக்திமாரியை அசிங்கமாக திட்டியுள்ளார், பின்னர் மதியம் 3.15 மணியளவில் சக்திமாரி தன் வீட்டில் இருந்த போது காளீஸ்வரி என்பவர் அவரிடம் வந்து உனது அண்ணன் முத்துக்குமாரை எல்லோரும் சேர்ந்து அம்பேத்கார் சிலை முன்பு அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல உடனே சுப்ரமணியபுரம் அரிஜன காலனி, அம்பேத்கார் சிலை முன்பு சென்று பார்த்த போது அங்கே அவரது அண்ணன் முத்துகுமாரை முனியராஜ் அடித்துக் கொண்டிருந்தார், அப்போது அவர்களை சக்திமாரி சென்று தடுத்தபோது, முனியராஜ், சக்திமாரியை தன் காலில் கிடந்த செருப்பால் அடித்துள்ளார், அப்போது முனியராஜின் அப்பா செல்வராஜ் சக்திமாரியை பிடித்துக் கொள்ள முனியராஜ் அவரை மாறி, மாறி செருப்பால் அடித்துள்ளார், அப்போது சம்பவத்தை நேரில் பார்த்த சக்திமாரியின் அம்மா கருப்பாயி, அவரை வீட்டிற்கு அழைத்து சென்றார். அதன்பின் முனியராஜின் அராஜகமான நடவடிக்கையால் மன உளச்சல் அடைந்த சக்திமாரி எலி மருந்து சாப்பிட்டுள்ளார், உடனே அவரை காப்பாற்றும் நோக்கில் அக்கம் பக்கம் உள்ளோர்கள் அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர், அதன்பின் மருத்துவ மனை மருத்துவ அலுவலகர்களின் தகவலின்படி, ஜெய்ஹிந்துபுரம் B6 காவல் நிலைய காவலர்கள் மருத்துவ மனை சென்று திருமதி சக்திமாரியிடம் புகாரை பெற்று, காவல் ஆய்வாளர் திருமதி எஸ்தர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. B.G.செல்வகுமார் அவர்கள் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.



