Police Recruitment

J11 கண்ணகி நகர் காவல் நிலையம்

J11 கண்ணகி நகர் காவல் நிலையம்

சென்னை பெருநகர காவல் நிலைய சரகம் குற்ற சம்பவங்களை முற்றிலும் குறைக்க வேண்டும் எனவும் திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனவும் காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் உத்தரவிட்டதை அடுத்து கூடுதல் ஆணையாளர் (தெற்கு )திரு. தினகரன் இ.கா.ப. அவர்கள் மற்றும் தெற்கு மண்டல இணை ஆணையாளர் திரு .பாபு இ.கா.ப. அவர்களின் வழிகாட்டுதலின்படி அடையாறு மாவட்ட துணை ஆணயாளர் திரு.விக்கிரமன் இ.கா.ப அவர்கள் அறிவுரையின் பேரில் அடையாறு மாவட்டத்தின் அனைத்து சரக த்திலும் உதவி ஆணையாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் விரைந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 01.01. 2021 தேதி இரவு ராமச்சந்திரன் வயது 55 தந்தையார் பெயர் பாலகிருஷ்ணன் ராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் துரைப்பாக்கம் என்பவர் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ராம் ரெசிடென்சி விடுதியில் தங்கியுள்ளதாகவும் தான் இரவில் தூங்கி விட்டு மறுநாள் எழுந்து பார்த்தபோது தன்னுடைய அறையில் இருந்த Haier என்ற டிவியை காணவில்லை என புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு. கலைச்செல்வி சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து பார்த்ததில் இரு நபர்கள் திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இவர்கள் இருவரையும் தேடிவந்த நிலையில் கண்ணை நகர் உதவி ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் ரோந்து சென்று கொண்டிருந்தபோது கண்ணகி நகரில் செல்போனை விற்க முயன்ற நபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ய அவர்கள் இருவரும் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் வயது 27 தந்தையார் பெயர் கர்ணா மற்றும் சர்க்கரை என்கிற வினுசக்கரவர்த்தி வயது 27 என்பதும் அவர்கள் கையில் வைத்திருந்த 3 செல்போன்களும் திருடப்பட்டது என்று கண்டறியப்பட்டது .அவர்களை மேலும் விசாரணை செய்ததில் மேற்கண்ட புகாரில் குறிப்பிட்ட டிவியை திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போன்கள் மற்றும் டிவியை கைப்பற்றி இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கைப்பற்றப்பட்ட செல்போன்களின் உரிமையாளர்களை கண்டறிந்து ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விடுதியில் டிவி மற்றும் செல்போன் களை திருடிய நபர்கள் இருவரை கைது செய்த உதவி ஆய்வாளர் திரு கார்த்திகேயன் அவர்களை காவல் ஆணையாளர் அவர்கள் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.