திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” (Operation Smile) என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு மற்றும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட காப்பகத்தில் ஒப்படைத்தும், குழந்தைகளின் நலனுக்காக குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவார்கள். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. மீனாட்சி அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, மாவட்ட தொழிலாளர் நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் சைல்டு லைன் ஆகியோருடன் சேர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 1.திருவள்ளூர் 2.ஊத்துக்கோட்டை 3.பெரியபாளையம் 4.திருத்தணி 5.பள்ளிப்பட்டு 6.பொன்னேரி 7.கும்மிடிப்பூண்டி 8.சோழவரம் 9.மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகளை மீட்டு மேலும் காணாமல் போன சிறுவர், சிறுமிகள் 9 பேரை மீட்டு மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள காப்பகங்களை ஆய்வு செய்து 6 இடங்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, தகுந்த அறிவுரைகளை வழங்கி குழந்தைகளின் எதிர்காலம் கருதியும், குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகள் மற்றும் காணாமல் போன 9 குழந்தைகள் மீட்டு பெற்றோர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி அவர்களுடைய பெற்றோர்களிடம் குழந்தைகளை அனுப்பி வைத்தனர்.
Related Articles
திருமங்கலம் அருகே விபத்து- ஓட்டல் தொழிலாளர்கள் 2 பேர் பலி
திருமங்கலம் அருகே விபத்து- ஓட்டல் தொழிலாளர்கள் 2 பேர் பலி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சாஸ்தா நகரை சேர்ந்தவர் சந்திரன் மகன் சுஜித் (வயது 20). இவரது நண்பர் செந்தில்குமார் மகன் பிரபு (26). இவர்கள் இருவரும் கோவையில் ஒரு ஓட்டலில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தனர். இன்று காலை […]
தலைப்பு விபத்து ஏற்படாதவாறு தடுப்பு அமமைத்த காவல் ஆய்வாளர் க்கு வியாபாரபெருமக்கள் பாராட்டு
நேற்று 24.01.2021 ம் தேதி தெற்குவாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சாலை விபத்துக்களை தடுக்கவும் பொது மக்கள் பாதுகாப்பாக சாலையில் செல்லவும் ஜெயவிலாஸ் சந்திப்பு முதல் ஜெயவிலாஸ் பஸ் நிலையம் வரை தடுப்பு அரண் அமைத்தார்கள்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் விழாக்குழு அமைக்கக்கூடாது
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் விழாக்குழு அமைக்கக்கூடாது மதுரையை சேர்ந்த முருகன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் முனியாண்டி சுவாமி கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவில் திருவிழாக்களில் எந்த தனி நபர் கமிட்டியின் அமைக்க கூடாது என்று ஏற்கனவே 2017-ம் ஆண்டு உயர்நீதி மன்ற உத்தரவு உள்ளது. இந்தநிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி நடைபெற இருக்கக்கூடிய […]