திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆரம்பாக்கம் அருகேயுள்ள பெரியநத்தம்காலணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஆந்திராவில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சோதனை மேற்கொண்ட போது ரெங்கநாதன் என்பவரது வீட்டில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார் ரெங்கநாதன் மற்றும் அவரது மகன் தங்கராஜை கைது செய்தனர். திருவள்ளுர் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.சி.பி.சக்கரவர்த்தி IPS அவர்களின் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் G.ராஜன் அவர்களின் தலைமையில் ஆரம்பாக்கம் ஆய்வாளர் குமரன்,அவர்கள், மற்றும், துணை ஆய்வாளர் சந்திரசேகரன் துணை ஆய்வாளர்,சுரேஷ் மற்றும் காவலர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.சிறப்பாக செயல்பட்டு செம்மரக்கடத்தல் கும்பலை பிடித்த காவல்துறைக்கு போலிஸ் இ நியூஸ் சார்பாக சல்யூட்