Police Recruitment

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கொரோனா தடுப்பூசி போடுவது சம்பந்தமான விழிப்புணர்வு

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கொரோனா தடுப்பூசி போடுவது சம்பந்தமான விழிப்புணர்வு

நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கவாத்து பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டிய காரணத்தால் கொரனோ நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் பற்றி அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கோவில்பட்டி சுகாதார துறை பணிகள் இணை இயக்குனர் டாக்டர் திருமதி.அனிதா அவர்கள் கலந்து கொண்டு காவலர்களுக்கு கொரனோ தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் நடத்திய விழிப்புணர்வு கூட்டத்தில் விளாத்திகுளம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் திரு.இன்பராஜ், விளாத்திகுளம் வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் திரு.ரசல்ராஜ், விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன் பலனாக இன்று மட்டும் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 60 பேர் covid-19 தடுப்பூசி போட்டுகொண்டனர். இதுவரை விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 105 நபர்கள் covid-19 தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.