Police Recruitment

தமிழக காவல்துறையில் பல பிரிவுகள் உள்ளன. இருப்பினும் அரசை நேரடியாகவும் மறைமுகமாகவும் இயக்குவதில் உளவுத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு.

உளவுத்துறை

தமிழக காவல்துறையில் பல பிரிவுகள் உள்ளன. இருப்பினும் அரசை நேரடியாகவும் மறைமுகமாகவும் இயக்குவதில் உளவுத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு.

இந்த உளவுத்துறையினர் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுத்துறை தலைவர்(தற்போது ஐஜி ஈஸ்வரமூர்த்தி) கீழ் மாவட்டம்தோறும் செயல்பட்டு வருகிறது.

இது அரசின் கண்களாகவும் காதுகள் ஆகவும் இருந்து செயல்படுகிறது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இந்தத் துறை பற்றிய புரிதல் அவ்வளவாக இல்லை.

பொது மக்களில் பெரும்பாலானோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் தனிப்பிரிவு காவலர்களையே பெரும்பாலும் உளவுத்துறை என்று நம்புகின்றனர்.

ஆனால் இது உண்மை அல்ல உளவுத்துறை மாவட்டம் தோறும் ஒரு ஆய்வாளர் தலைமையில் இயங்குகிறது இதன் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறார்.

மாநிலத்திற்கு இவர் ஒரே ஒரு எஸ்பி தான். ஆங்கிலத்தில் இவர்களை எஸ்பி சிஐடி ( special branch Crime Investigation Department) என்று அழைப்பார்கள்.

இவர்கள் ரகசியமாக தகவல்களை சேகரிக்க வேண்டியுள்ளதால் இவர்களுக்கு என்று தனி அலுவலகம் மாவட்டத்தின் தலைமை இடத்தில் மட்டுமே உண்டு.

ஒவ்வொரு உட்கோட்ட திற்கும் பெரும்பாலும் ஒரு உதவி ஆய்வாளர் பொறுப்பு வகிப்பார்.

இவர்கள் சட்டம்-ஒழுங்கை மட்டுமே கண்காணிக்காமல் அரசின் அனைத்து துறைகளையும் உதாரணமாக வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, நீதித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, என அரசின் அனைத்து துறைகளையும் கண்காணித்து அவர்களை பற்றிய தகவல்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்கள். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

மேலும் அரசியல் நிலவரங்களையும் முதல்வரின் / அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்கள். பொதுமக்களில் பலர் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் உண்மையான உளவுத்துறை யார் என்று குழம்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.